திருச்செந்தூரில் ஏற்பட்டதை போன்ற நிர்வாக குளறுபடிகள், திருவண்ணாமலை யில் நிகழாமல் இருக்க, தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மேட்டுப்பாளையத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலையில் பல லட்சக்க ணக்கான பக்தர்கள் கூட உள்ளனர். சமீபத்தில் திருச்செந்தூரில் ஏற்பட்டதை போன்ற நிர்வாக குளறுபடிகள், திருவண்ணாமலையில் நிகழாமல் இருக்க, தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பது இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் அனைத்து முருக பக்தர்களின் பல நூறு ஆண்டுகால கோரிக்கையாகும். இதற்காக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும், அதனை செயல்படுத்தாமல், தமிழக அரசு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவது பக்தர்களின் மனதை புண்படுத்தும் செயலாகும். முந்தைய தி.மு.க. அரசை போலவே தற்போதைய த.வெ.க. அரசும் ஆலய விவகாரங்களில் தலையிடுகிறது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் அமைதியான முறையில் தீபம் ஏற்றுவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளது. தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் வித்தி யாசம் இல்லை. இரண்டும் ஒன்று தான். போதைப்பொருள் மற்றும் கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளது டன், தினமும் கொலை, கொள்ளை, சிறையிலிருந்து கைதிகள் தப்பிப்பது போன்ற குற்றச்சம்பவங்கள் நடை பெற்று வருகின்றன.
காணாமல்போன சிறுமி வழக்கில் கூட இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே முதலமைச்சர் இதில் நேரடியாக தலையிட்டு, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.