தமிழ்நாடு காவல்துறையில் 13 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு!

தமிழ்நாடு காவல்துறை உளவுப் பிரிவின் ஐ.ஜி. அஸ்ரா கார்க், உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. பொறுப்பையும் கூடுதலாக சேர்த்து கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் 13 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு!
Published on: 

தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், பணி ஆணை வழங்கியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சேலம் காவல் ஆணையராக இருந்த ஜோஷி நிர்மல் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சென்னை தலைமை அலுவலகத்தில் நவீனப்படுத்துதல் பிரிவு ஐ.ஜி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • சென்னை மாநகர கூடுதல் ஆணையராக இருந்த பாபு, சேலம் மாநகர ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • சேலம் சரக டி.ஐ.ஜி, சந்தோஷ் ஹடிமணி சென்னை காவல் உளவுப் பிரிவு இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஐ.ஜி. தேவராணி, சேலம் சரக டி.ஐ.ஜி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி. ஆக இருந்த பத்ரி நாராயணன், சென்னை அடையாறு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏ.சி.கார்த்திகேயன் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி.ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சென்னை போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி. மதிவாணன், சென்னை பரங்கிமலை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சென்னை பரங்கிமலை துணை ஆணையர் ஸ்ரீனிவாசன், சென்னை போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • கன்னியாகுமரி எஸ்.பி. பொறுப்பில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஸ்டாலின், சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • சென்னை மாநகர பாதுகாப்பு துணை ஆணையராக இருந்த சுந்தர வடிவேல், சென்னை மாநகர காவலர் நலன் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்த பாஸ்கரன், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • சேலம் வடக்கு துணை ஆணையர் அங்கித் சிங், சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி. ஆக இருந்த ஸ்டாலின், சிபிசிஐடி தென் மண்டல எஸ்.பி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com