தொடர்கதை - ஆர்.டி.ஐ.யில் சட்டம், ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்ததை வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் லாக்கப் மரணங்கள் அதிகரித்து வரும்நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொடர்கதை - ஆர்.டி.ஐ.யில் சட்டம், ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்ததை வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு!
Published on: 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்த விலக்கு அரசாணையை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளது.

முன்னதாக, செப்டம்பர் 21, 2026 என்ற தேதியிட்டு மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்ட அரசாணையில், பொதுத் துறையின் கீழ் உள்ள சட்டம்-ஒழுங்கு பிரிவு ஒரு உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பு என வகைப்படுத்தப்பட்டு, அதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு 24(4)கீழ் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக, சாதி மோதல்கள், காவல் மரணங்கள், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டங்கள் போன்ற உணர்வுப்பூர்வமான தகவல்களை பொதுமக்கள் இனி ஆர்.டி.ஜ. மூலம் பெற முடியாது என்ற நிலை உருவானது.

கடும் எதிர்ப்பு

இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் கடும் கண்டனங்கள் எழு, இந்த அரசாணையை திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

லாக்கப் மரணங்கள்

முக்கியமாக, காவல்துறை துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணை அறிக்கைகள், காவல் துறை காவலில் ஏற்படும் மரணங்கள், காவல்துறை சித்திரவதை, மற்றும் விசாரணைக் கைதிகளின் மரணங்கள் குறித்த அறிக்கைகளை ஆராய்வதும் இந்த ஆர்டிஐ வரம்புக்குள் வருகிறது.

இதனை கருத்தில்கொண்டே, தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகக் காவல் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசு, இந்த உத்தரவை பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

தவெக அரசில் ஒரு கடந்தசில நாட்களாகவே சர்ச்சைக்குரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, கண்டனங்கள் எழுந்தால் திரும்பப் பெறுதல் என்பது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com