மாற்றுத்திறனாளிகளுக்கு ஏ.ஐ. உதவி உபகரணம்- ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான நவீன உயர் தொழில்நுட்ப உபகரணங்களைத் தங்களின் தகுதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு, சுயசார்புடன் வாழ வழிவகை செய்வதே இதன் நோக்கமாகும்.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on: 
Summary

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன ஏ.ஐ. உதவி சாதனங்களுக்கு ரூ.3 கோடி ஒதுக்கி, 50% மானியத்துடன் 2026-27-ம் ஆண்டுக்குள் 1000 பேருக்கு உதவியளிக்க அரசாணை வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன ஏ.ஐ. உதவி உபகரணங்களுக்கு மானியம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 50% மானிய திட்டத்தை செயல்படுத்தும் அரசாணை ஆகும்.

இதன்படி 2026-27-ம் ஆண்டில் 1000 பேருக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மானியம் மற்றும் நிதியுதவி

தற்போதுள்ள வழக்கமான உதவி சாதனங்கள் விநியோகத் திட்டத்தின் கீழ் வராத, அதிநவீன ஏ.ஐ. அடிப்படையிலான சாதனங்களை மாற்றுத்திறனாளிகள் வாங்குவதற்கு, அதன் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 30,000 வரை நிதி உதவி (மானியம்) அரசாங்கத்தால் வழங்கப்படும்.

சாதனங்கள்

விளையாட்டுப் போட்டிகளுக்கான செயற்கைக் கால்கள், தசைமின் சைகை மூலம் இயங்கும் செயற்கை மேல் உறுப்புகள், காக்லியர் இம்ப்ளான்ட் பேட்டரிகள் மற்றும் இதர நவீன ஏ.ஐ.உதவி சாதனங்கள் இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும்.

நோக்கம்

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான நவீன உயர் தொழில்நுட்ப உபகரணங்களைத் தங்களின் தகுதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு, சுயசார்புடன் வாழ வழிவகை செய்வதே இதன் நோக்கமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com