ராகுல் காந்தி கைது- ஜி.கே.வாசன் கண்டனம்

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் மீது டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததும் முறையற்றது.
ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்
Published on: 
Summary

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து, ஜனநாயக போராட்டங்களுக்கு இடம் தர வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (Election Commission of India) நடத்தப்பட்ட "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்" (Special Intensive Revision- SIR) என்ற நடவடிக்கையில் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து சந்தேகம் வலுத்துள்ளது.

ஏற்புடையதல்ல

அந்த வகையில் SIR நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும்.

இதனை முன்னிறுத்தி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனநாயக முறைப்படி போராடினார்கள்.

அந்த போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்த நடைமுறை கண்டனத்துக்குரியது, ஏற்புடையதல்ல.

கண்டனம்

குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் மீது டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததும் முறையற்றது.

இது போன்ற அணுகுமுறையை காவல்துறையினரும் டெல்லி அரசும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

SIR சம்பந்தமாக நியாயமாகப் பேரணியில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்ததை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கண்டித்து, ஜனநாயகத்தில் நியாயமான போராட்டத்திற்கு இடம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com