கோலாகலமாக தொடங்கிய விநாயகர் சதுர்த்தி .. தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு

கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி
Published on
Summary

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விநாயகர் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் இன்று (விநாயகர் சதுர்த்தி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் இவ்விழா வருடந்தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இவ்வாண்டும் விழா கலைகட்டத் தொடங்கியுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலையிலேயே மாநிலம் முழுவதும் விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவில்களுக்கு வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

வழிபாடு

குறிப்பாக பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், புலியகுளம் முந்தி விநாயகர் கோயில், தாமிரபரணி நதிக்கரை உச்சிஷ்ட மகா கணபதி கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்ய ஏராளாமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவருக்குப் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் கலசாபிஷேகமும் செய்யப்பட்டன.

தொடர்ந்து பல கலை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்த்து மொத்தம் 3,000 சிலைகள் வரை நிறுவப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படவுள்ளன.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் அலங்கார பொருட்கள் மற்றும் பூ, பழம், வாழை இலை உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இருப்பினும் பக்தர்கள் ஆர்வமுடன் பூஜை பொருட்களை வாங்கி கோவில்களுக்கு செல்வதோடு தத்தமது வீடுகளிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com