

விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படும் நிலையில், விநாயகரை வாங்கும் நல்ல நேரம் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்தும், விநாயகரை கரைப்பதற்கான வழிபாட்டு முறைகள் குறித்தும் ஆன்மீகவியலாளர் தெரிவித்துள்ளனர்.
விநாயகப் பெருமானின் பிறப்பை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வணங்கியும், கோவில்களுக்கு சென்று பிரார்த்தனைகளை செய்தும் விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இன்று (14.09.26) காலை 08:41 மணி முதல் தொடங்கி நாளை (15.09.26) காலை 09:22 மணி வரையில் முடியும் வகையில் அமைந்துள்ளது.
விநாயகரை இன்று வாங்கும் நல்ல நேரமாக காலை 09:10 மணி முதல் 10:20 மணிக்குள் இடைப்பட்ட காலம் அமைந்துள்ளது.
அதேபோன்று விநாயகரை வழிபடும் உகந்த நேரமாக இன்று காலை 09:15 மணி முதல் 10:20 மணியளவிலான இடைப்பட்ட காலம் அமைந்துள்ளது.
மேலும் இன்று மதியம் 01:00 மணி முதல் 02:00 மணி வரையும், மாலை 06:00 மணி முதல் 08:00 மணி வரையும் விநாயகரை வழிபடும் உகந்த நேரமாக பார்க்கப்படுகிறது.
விநாயகரை வழிபடும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் பாலை காய்ச்சி, அதில் தேன் கலந்து வைத்து நெய் வைத்தியம் பண்ணும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவல், பொறி, கடலை மற்றும் தேங்காய் வாங்கி வைத்து பிரார்த்தனை செய்பவர்களும், அதை வாங்கி விநாயகரை வணங்கும்படி ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, சுண்டல், அவல் பாயாசம் அல்லது பருப்பு பாயாசம் செய்துவைத்து வி நாயகப் பெருமானை வழிபாடு செய்யலாம்.
ஒரு அருகம்புல்லை கொண்டு சென்று விநாயகரின் திருவடியில் வைத்து உள்ளமுருகி வணங்கினால், அவர்களின் நல்ல மனதிற்கு ஏற்ப, வேண்டியதை தருபவராக விநாயகர் பெருமான் உள்ளார்.
மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டில் உள்ள மஞ்சள் மற்றும் பச்சரியை பயன்படுத்தி விநாயகரை செய்து உள்ளன்போடு பக்தியுடன் வழிபடும்படி ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
விநாயகரை அருகில் உள்ள கோவில்களுக்கு எடுத்து சென்றும் அல்லது விநாயகரை மொத்தமாக வழிபடும் இடங்களிலும் வைத்து புனிதமான முறையில் கரைக்கும்படி ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
விநாயகரை ஞாயிற்று கிழமை வாங்கி இருந்தால், அதனை கரைப்பதற்கு உகந்த நேரமாக வியாழக்கிழமை அமைந்துள்ளது. மேலும் வியாழக்கிழமை காலை 08:00 மணி முதல் 09:00 மணி வரையிலும் அல்லது காலை 10:45 மணி முதல் மதியம் 01:00 மணி வரையிலும் கரைப்பதற்கு உகந்த நேரமாக பார்க்கப்படுகிறது.
விநாயகரை திங்கட் கிழமை வாங்கி இருந்தால், அதனை கரைப்பதற்கு உகந்த நேரமாக புதன்கிழமை அமைந்துள்ளது. மேலும் புதன்கிழமை காலை 09:00 மணி முதல் 10:20 மணி வரை கரைப்பதற்கு உகந்த நேரமாக பார்க்கப்படுகிறது.