நகராட்சி ஆணையாளர் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி- 3 பேர் கைது

சான்றில் இருக்கும் நகராட்சி ஆணையர் கையெழுத்து மற்றும் நகராட்சி முத்திரை போலியானது எனவும் குற்றச்சாட்டை கூறி இருந்தனர்.
நகராட்சி ஆணையாளர் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி- 3 பேர் கைது
Published on: 
Summary

ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர் குமாரசாமி, இடைத்தரகர் ரவி, கட்டிட உரிமையாளர் குணசேகரன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் பல்வேறு புதிய கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக 10 ரூபாய் இயக்கம் சார்பில் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

புகார்

அதில் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள குணசேகரன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்திற்கு முறைகேடாக கட்டிட பணி நிறைவு சான்று வழங்கப்பட்டதாகவும், அதை பயன்படுத்தி கட்டிடத்திற்கு மின் இணைப்பு பெறப்பட்டு உள்ளதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறி ஆவணம் ஒன்றையும் 10 ரூபாய் இயக்கத்தினர் போலீசாரிடம் வழங்கினர்.

குறிப்பாக அந்த சான்றில் இருக்கும் நகராட்சி ஆணையர் கையெழுத்து மற்றும் நகராட்சி முத்திரை போலியானது எனவும் குற்றச்சாட்டை கூறி இருந்தனர். இதனிடையே குணசேகரன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்திற்கு போலியான கட்டிட பணி நிறைவு சான்றிதழ் முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளதாக நகராட்சி ஆணையர் கோபிநாத் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார்.

கைது

அதை தொடர்ந்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம், வள்ளுவர் நகரை சேர்ந்தவரும், ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் செயின் மேனாக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான குமாரசாமி (62), அரசு முத்திரை முறைகேடாக பயன்படுத்தியதோடு போலியாக ஆணையர் கையெழுத்தை போட்டதும் தெரிந்தது.

கைது

மேலும் அதற்காக ரூ.30 ஆயிரத்தை கட்டிட உரிமையாளர் குணசேகரன் ராசிபுரம் அபிராமி கார்டனில் வசிக்கும் இடைத்தரகர் ரவி மூலம் குமாரசாமிக்கு வழங்கி சான்றிதழை பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர் குமாரசாமி, இடைத்தரகர் ரவி, கட்டிட உரிமையாளர் குணசேகரன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com