த.வெ.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்ட முன்னாள் அமைச்சர்

த.வெ.க. சார்பில் போட்டியிடும் சத்தியபாமாவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூலனூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
Published on: 
Summary

த.வெ.க. சார்பில் போட்டியிடும் சத்தியபாமாவை ஆதரித்து,எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூலனூர் பகுதியில்வாக்கு சேகரித்தபோது, பழக்க தோஷத்தில் தனது பழைய கட்சியான அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கேட்பது போல் நினைத்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு அளியுங்கள் என்று பிரசாரம் செய்து விட்டார்.

தாராபுரம் இடைத்தேர்தல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. தற்போது இங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. த.வெ.க. சார்பில் போட்டியிடும் சத்தியபாமாவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூலனூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சத்தியபாமா

அப்போது சத்தியபாமாவுக்கு த.வெ.க. சின்னமான விசிலுக்கு, வாக்களிக்கும்படி ஆதரவு கேட்பதற்கு பதிலாக இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதைக் கேட்டதும் வேட்பாளர் சத்தியபாமாவுக்கு திடீரென முகம் மாறியது. இதை அறிந்ததும் விஜயபாஸ்கர் சமாளித்து பேசினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அ.தி.மு.க.வில் இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது வேட்பாளர் சத்தியபாமாவுக்கு வாக்கு சேகரித்தபோது, பழக்க தோஷத்தில் தனது பழைய கட்சியான அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கேட்பது போல் நினைத்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு அளியுங்கள் என்று பிரசாரம் செய்து விட்டார்.

என்னதான் இருந்தாலும், தற்போது நாம் எந்த கட்சியில் இருக்கிறோம், யாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம் என்பதை அறிந்து ஓட்டு கேட்க வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் விமர்சித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com