அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

நேற்று [ஜூலை 30] அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்நரம்பியல் பிரச்சனை காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம்  விஸ்வநாதனுக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி
Published on

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்று [ஜூலை 30] அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த நத்தம் விஸ்வநாதன் கூட்டத்தில் இருந்து முன்கூட்டியே சென்ற நிலையில் அவருக்கு நரம்பியல் பிரச்சனை காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

எனவே ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நத்தம் விஸ்வநாதனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com