வெள்ளி பொருட்கள் இருப்பு குறித்து தெரிவித்த பெண் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு

தொடர்புடைய சிலர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கைது
கைது
Published on: 
Summary

323 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (58). இவரது வெள்ளி பட்டறையில் கடந்த 12-ந் தேதி காவலாளி வெங்கடேசனை தாக்கி, 550 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

மூளையாக செயல்பட்டவர்

இது தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இதற்கு மூளையாக செயல்பட்ட கோவையை சேர்ந்த அபிஷேக் (21), ஸ்ரீதர், ஞானபிரகாசம், அண்ணாமலை, அருண்குமார் ஆகிய 5 பேரை, கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 323 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

தஞ்சை பெண்

இந்நிலையில் பட்டறையில் வெள்ளி ஆபரணங்கள் இருப்பு குறித்த தகவல்களை கொள்ளையர்களுக்கு தெரிவித்ததாக தஞ்சாவூரை சேர்ந்த இளம்பெண் நீலவேணி (35), சேலம் தாதகாப்பட்டி ராஜாராம் (55), அம்மாபேட்டை மனோஜ் (36), பெரமனூர் தங்கராஜ் (57), மெய்யனூர் மகேந்திரன் (52) ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

X