ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப மீன் வளத்துறை அறிவுறுத்தல்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது.
Fihermen
Published on: 
Summary

தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளிலிருந்து ஆழ்கடலுக்கு சென்றுள்ள விசைப்படகுகள் அனைத்தும் உடனடியாக கரைதிரும்புமாறு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறிய சூழல் உள்ளதால் தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளிலிருந்து ஆழ்கடலுக்கு சென்றுள்ள விசைப்படகுகள் அனைத்தும் உடனடியாக கரைதிரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மீன்வளத்துறையிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com