

திருவள்ளூர் நகராட்சியில் தினமும் 23 டன் குப்பைகள் சேகரித்து அகற்றி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை முதல் இரவு வரை பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
திருவள்ளூரில் நகராட்சி பகுதியில் பட்டாசு வெடித்த குப்பைகள் குவிந்து இருந்தன. பட்டாசு குப்பைகளை அகற்ற திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சரவணன் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டு தெருக்களில் குப்பைகளை அகற்றும் பணி இன்று காலை தீவிரமாக நடைபெற்றது.
திருவள்ளூர் நகராட்சியில் தினமும் 23 டன் குப்பைகள் சேகரித்து அகற்றி வருகின்றனர். ஆனால் தீபாவளிக்கு மறுநாளான இன்று இதுவரை 29 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
இதில் கூடுதலாக 6 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு இருப்பதாக நகராட்சி பணியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.