தந்தையர் தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து...

அப்பாவின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கௌரவிக்கும் நாளாகும்.முதலமைச்சர் தனது தந்தை அவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தந்தையர் தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து...
Published on

தந்தை யர் தினம் என்பது ஒவ்வொருவரின் வாழ்வில் அவரது அப்பாவின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கௌரவிக்கும் நாளாகும். இந்த நாள் உங்கள் தந்தைக்கு, வாழ்க்கையில் அவர் உங்களுக்காக செய்த தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டிட்டி நன்றி தெரிவிக்கலாம்.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது தந்தை மு. கருணாநிதிக்கு நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தனது தந்தை அவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

"தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடைய வேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com