பண்ணை குட்டை அமைத்து பயிர்களை காப்பாற்றி வரும் விவசாயிகள்

பருவமழை பொய்த்துள்ளதால் மலை தோட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Farm pond
Published on: 
Summary

குன்னூர் அருகே உள்ள கேத்தி பாலடா, கேத்தி, சேமந்தாடா கொல்லிமலை, நஞ்சநாடு, கப்பத்தொரை, மேல்கெளட்டி உள்ளிட்ட பகுதிகளில் பண்ணை குட்டை மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் முதுகெலும்பாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது. அதற்கு அடுத்த படியாக மலை தோட்ட காய்கறி பயிர்களாக பல்வேறு காய்கறி வகைகள் பயிர் செய்யப்படுகிறது.

காய்கறிகள் விளைச்சல்

இங்கு பயிரிடப்படும் மலைத்தோட்ட காய்கறிகளை மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, சென்னை மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மற்ற கால கட்டங்களில் எந்த காய்கறிகளை பயிர் செய்தாலும் மழை பொழிவு மற்றும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையினால் சிறந்த விளைச்சலை கொடுத்து வருவதால் விவசாயிகள் அதிக அளவு காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

கடும் வறட்சி

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் மே மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர்மாதம் வரை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளதால் மலை தோட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ள நிலையில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் குளங்கள் போல் பள்ளத்தை தோண்டி பண்ணைகுட்டை முறையில் நீரைசேமித்து அந்த நீரை விவசாய நிலங்களில் விவசாய பயிர்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

பண்ணை குட்டை

பண்ணை குட்டை முறையில் ஸ்ப்ரிங்களர் மூலம் நீர்ப்பாய்ச்சும் போது குறிப்பிட்ட அளவில் நீர் செலவாகும் நிலையில் விவசாயிகள் தற்போது அதிக அளவு பண்ணை குட்டை மூலம் தங்கள் நிலங்களில் பயிரிட்டுள்ள உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், வெள்ளைப் பூண்டு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். குறிப்பாக குன்னூர் அருகே உள்ள கேத்தி பாலடா, கேத்தி, சேமந்தாடா கொல்லிமலை, நஞ்சநாடு, கப்பத்தொரை, மேல்கெளட்டி உள்ளிட்ட பகுதிகளில் பண்ணை குட்டை மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.

கோரிக்கை

தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளதால் இந்த முறையில் நீரை சேமித்து விவசாயம் செய்வதற்காக தோட்டக்கலை துறையினர் மானியத்தை அதிகரித்து தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com