

டாக்டர் கணேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனலட்சுமியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள அம்பலூர் ஊராட்சி கோகுல் சிட்டி பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது53). இவர் பிளஸ் -2 மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) வேல்முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கணேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தனலட்சுமி மருத்துவப் படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர் அவரை அம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். டாக்டர் கணேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனலட்சுமியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.