6 மாதங்கள் கூட தாங்காது..தவெகவுக்கு வாக்களித்தவர்களே புலம்புகின்றனர்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இந்த ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகளுக்கும் போதைப்பொருளுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது.
M.K.Stalin
Published on: 
Summary

தமிழகத்தில் தவெக ஆட்சி மீது மக்கள் மத்தியில் கடும் ஏமாற்றமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இல்லத் திருமணவிழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொணடு மணமக்களை வாழ்த்தினார். அப்போது உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தவெக ஆட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களே தற்போது தங்களது முடிவை நினைத்து புலம்பித் தவித்து வருவதாகத் தெரிவித்தார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துவிட்டதாகவும், கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, பெண்களைப் பாதுகாக்கக்கூடிய சிங்கப்பெண் படையைப் பாதுகாப்பதற்கே இப்போது இன்னொரு பாதுகாப்பு படையை உருவாக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், குழந்தைகள் கடத்தல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதாகவும், போதைப்பொருள் புழக்கம் தடுத்து நிறுத்த முடியாமல் பெருமளவில் பரவி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆறு மாதம் கூட இந்த ஆட்சி தாங்காது

இந்த ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகளுக்கும் போதைப்பொருளுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. இந்த ஆட்சி இன்னும் ஆறு மாதங்கள் கூட தாக்குப் பிடிக்காது. தீய சக்தி எது என்பது இப்போது மக்களுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டதாகவும், இந்தத் தவெக ஆட்சியை விரைவில் அகற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com