மன் கி பாத் நிகழ்ச்சியில் ஈரோடு வெல்லத்தை குறிப்பிட்ட பிரதமர் மோடி

நம் வீடுகளில் வெல்லம் என்பது ஒரு சுவையாகவும், ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவும் இருந்து வருகிறது.
 pm modi
பிரதமர் மோடி
Published on: 

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவார். இன்று கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவர் பேசினார்.

பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

குளிர்காலத்தை பற்றி பேசும்போது வெல்லத்தின் இனிமையை குறிப்பிடாமல் இருக்க முடியுமா? பல நூற்றாண்டுகளாக நம் வீடுகளில் வெல்லம் என்பது ஒரு சுவையாகவும், ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவும் இருந்து வருகிறது. தற்போது வெல்லம் உலகெங்கும் சென்றடைந்து கொண்டிருக்கிறது.

பாரம்பரிய வெல்லத்தின் சுவை

தமிழ்நாட்டின் ஈரோடு பகுதியில் இருந்து பனைமரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை வெல்லம் முதன்முறையாக ஐரோப்பாவிற்குச் சென்று அடைந்து உள்ளது. இது பாரம்பரிய வெல்லத்தின் சுவையையும், உயர் தரத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

முன்பு மன் கி பாத் நிகழ்ச்சியில் தேனின் இனிப்பு மற்றும் இனிப்பு புரட்சி பற்றி விவாதித்தோம். தற்போது நமது வெல்லத்தின் இனிப்பும் புதிய சந்தைகளை அடைந்து வருகிறது.

இவ்வாறு மோடி கூறினார்.

X