மேகதாது அணை விவகாரம்: சட்டசபை தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது ஏன்?- எடப்பாடி பழனிசாமி விளக்கம்

த.வெ.க கொண்டு வந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஆதரித்துவிட்டு உயர்நீதிமன்றத்தில் அதிமுக தற்போது வழக்கு தொடர்ந்துள்ளனது.
EPS
எடப்பாடி பழனிசாமி
Published on

காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடகாவின் நடவடிக்கையை எதிர்த்து என தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன. இதனால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனி நடுவர் மன்றம்

தனித் தீர்மானத்தில், மேகேதாட்டு பிரச்சினைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அதிமுக வழக்கு

பின்னர் அதிமுக, பாமக கட்சிகள் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது தேவையில்லாதது எனக் கூறினர். இந்த நிலையில் தீர்மானத்தில் உரிய விவாதம் நடத்தப்படாமல் திருத்தங்கள் சேர்க்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறி, அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கில் தமிழகத் தலைமைச் செயலாளர், சட்டமன்றச் செயலாளர் மற்றும் மத்திய ஜல்சக்தி துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* 2018-ம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது.

* தீர்ப்பின்படி கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும், மாதாந்திர வாரியாக காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

* உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில்லை. தமிழக அரசு போராடித்தான் தண்ணீரை பெறக் கூடிய நிலை இருந்து வருகிறது.

* கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் மேகதாது அணை கட்டுவோம் என பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

* மேகதாது அணை கட்டப்பட்டுவிட்டால், தமிழ்நாட்டின் டெல்லா பகுதி பாலைவனமாகிவிடும்.

* காவிரி 20 மாவட்டங்ளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

* த.வெ.க. அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஏதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்தது. இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் சட்டசபையில் தனித்தீர்மானம் வைக்கப்பட்டது.

முதல்வர் விஜய் முன்மொழிந்ததைத்தான் பதிலுரையில் தெரிவித்திருக்க வேண்டும்

* முதலமைச்சர் விஜய் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

* எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது ஒரு கருத்தை முன்வைத்தார்.

* முதலமைச்சர் விஜய், தனது பதிலுரையில் நடுவர் மன்றம் அமைக்கப்படும் என்பது குறித்து கருத்து தெரிவித்தார். இது தவறானது.

* முன்மொழிந்ததைத்தான் பதிலுரையில் தெரிவித்திருக்க வேண்டும். ஒரு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால், சட்டசபை விதி 104-ன் கீழ், என்ன திருத்தம் செய்யப்படுகிறது என்பது குறித்து அவைத் தலைவரின் அனுமதி பெற்று முன்மொழிய வேண்டும்.

* பிறகு விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். பிறகு வாக்கெடுப்பு நடத்தி தீர்மானத்தில் சேர்க்கப்பட வேண்டும். இது தொடர்பாகத்தான் நாங்கள் சட்டமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றோம்.

X

Maalai Malar
www.maalaimalar.com