பழைய இரும்புகளை லாரியில் ஏற்றியபோது தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது- கூலி தொழிலாளி பலி

முதற்கட்ட விசாரணையில் சேலத்தை சேர்ந்த இரும்பு வியாபாரி முருகன் என்பவர் பழைய இரும்பை எடுப்பதற்காக 5 பேரையும் ராசிபுரம் அனுப்பி வைத்ததும், அவர்கள் மின்சார விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
பழைய இரும்புகளை லாரியில் ஏற்றியபோது தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது- கூலி தொழிலாளி பலி
Published on: 

சேலம் குரங்குச்சாவடியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி அய்யனார் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் மற்றும் பிரதாப் (21), மாணிக்கம், சுரேஷ், வடமாநில தொழிலாளி விஜி உள்ளிட்டோர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி அண்ணா நகரில் மதலைமுத்து என்பவரின் குடோனில் இருந்து பழைய இரும்புகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

பலி

அந்த வழியாக மின் கம்பி செல்கிறது. இந்த மின்கம்பியில் இரும்பு உரசியதில் மின்சாரம் பாய்ந்து அய்யனார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மேலும் பிரதாப், விஜி ஆகியோர் காயம் அடைந்தனர். தொழிலாளர்கள் மாணிக்கம், சுரேஷ் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். காயம் அடைந்த பிரதாப், விஜி ஆகியோர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பொதுமக்கள் கூடினர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது.

சேலம் இரும்பு வியாபாரி

இது குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சேலத்தை சேர்ந்த இரும்பு வியாபாரி முருகன் என்பவர் பழைய இரும்பை எடுப்பதற்காக 5 பேரையும் ராசிபுரம் அனுப்பி வைத்ததும், அவர்கள் மின்சார விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.

பலியான அய்யனார் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

X