தீபாவளி நேரத்தில் ஆவின் பொருட்கள் விலை உயர்வு: லாபம் பார்க்க சரியான நேரமா?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழக மக்களுக்கு “வெற்றி தீபாவளி” பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on: 
Summary

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு குறித்து எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டனம் தெரிவித்தார். மக்களின் தேவைகளை பொருட்படுத்தாமல், லாபத்தை நோக்கி செயல்படும் அரசின் மனநிலையை அவர் கேள்வி எழுப்பினார். விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

வெண்ணை, தயிர், இனிப்பு வகைகள் உள்பட ஆவின் பால் பொருட்கள் விலை நாளை முதல் உயர்வதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி தீபாவளி

அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழக மக்களுக்கு “வெற்றி தீபாவளி” பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு.

மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று ஒரு அரசு நினைத்து செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை?

வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள். ஆனால், இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது.

Black Ticket

நடிகராக இருக்கும் பொது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட டிக்கெட்டுகளை விலை உயர்த்தி “Black Ticket”-ஆக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்தி விட்டீர்களோ? பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்!

“அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்” என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை Assign செய்துள்ளீர்கள் முதலமைச்சர் அவர்களே ?

மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com