செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி: இந்திய அணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

இரு பிரிவிலும் தங்கம் வென்றுள்ள இந்திய அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.நாட்டிற்கு நம் அணியினர் பெரும் புகழைச் சேர்த்துள்ளது மெச்சத்தக்கது.
செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி: இந்திய அணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
Published on

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

அங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டில் பொது மற்றும் மகளிர் என இரு பிரிவிலும் தங்கம் வென்றுள்ள இந்திய அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

செஸ் உலகின் தலைசிறந்த போட்டியில், மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடி, நாட்டிற்கு நம் அணியினர் பெரும் புகழைச் சேர்த்துள்ளது மெச்சத்தக்கது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com