

தமிழக சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* த.வெ.க. அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையே கவர்னர் உரையாக அமைந்துள்ளது.
* கவர்னர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை.
* சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* போதை பொருள் நடமாட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது.
* பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.
* 38 நாட்களில் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
* ஆட்சிக்கு முன்னர் பெண்கள் பாதுகாப்பு குறித்து வீர வசனம் பேசியவர்கள் இன்று நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக உள்ளனர்.
* சிங்கப்பெண் அதிரடிப்படை என்ற ஒன்றை உருவாக்கி உள்ளனர், அவர்களுக்கே பாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் உள்ளது.
* த.வெ.க ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 130 கொலைகள் நடந்துள்ளது.
* சட்டம் ஒழுங்கை காக்க இதுவரை எந்த நடவடிக்கையையும் த.வெ.க. அரசு எடுக்கவில்லை.
* விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை த.வெ.க. அரசு நிறைவேற்றவில்லை.
* நடப்பாண்டில் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படவில்லை.
* கர்நாடக அரசிடமிருந்து தண்ணீரை கேட்டுப்பெற இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* கட்டுமான பொருட்கள் விலை உயர்வை தடுக்க த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
* த.வெ.க. அரசு தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தது.
* தேர்தல் வாக்குறுதிகள் கவர்னர் உரையில் இடம்பெறும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
* தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் தூங்க முடியாத நிலை உள்ளது.
* தமிழக மக்களின் தூக்கத்தை தொலைத்த அரசாங்கம் த.வெ.க. அரசாங்கம்.
* மின்வெட்டுக்கு அணில் காரணம் என முந்தைய அரசு கூறியது, பீஸ் கேரியர் திருட்டே காரணம் என த.வெ.க. அரசு காரணம் கூறுகிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.