விரைந்து பூத் கமிட்டி அமைத்து முடிக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி உத்தரவு

10 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
விரைந்து பூத் கமிட்டி அமைத்து முடிக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி உத்தரவு
Published on

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், இன்றும் நாளையும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது.

காலை, மாலை என இரு வேளைகளில் தலா 10 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

2 நாட்கள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி, பூத் கமிட்டி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

மொத்தம் 82-ல் முதலில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பூத் கமிட்டி பணிகள் தாமதம் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, விரைந்து பூத் கமிட்டி அமைத்து முடிக்க வேண்டும் என்றும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பூத் கமிட்டி தான் மிகப்பெரிய கட்டமைப்பு. அதை சரியான முறையில் செய்ய வேண்டும் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com