அதிகாலை கைது - முதலமைச்சர் விஜய் உடன் பொருளாதார ஆய்வாளர் கலையரசன் சந்திப்பு!

காவல்துறை செய்தது தவறுதான் என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
அதிகாலை கைது - முதலமைச்சர் விஜய் உடன் பொருளாதார ஆய்வாளர் கலையரசன் சந்திப்பு!
Published on: 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்துப் பேசியுள்ளார் பொருளாதார ஆய்வறிஞர் கலையரசன்.

நேற்று அதிகாலை அவர் போலீசாரால் தவறாக கைது செய்யப்பட்டது சர்ச்சையான நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை அவதூறாகப் பேசியதாக வந்த புகாரின் அடிப்படையில், சென்னை சங்கர் நகர் காவல் துறையினர் நேற்று (அக்.28) அதிகாலை 5 மணியளவில் கலையரசனை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் சுயவிவரப் புகைப்படத்தின் அடிப்படையில் காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் அந்தப் பதிவை வெளியிடவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அது அவரது பெயரில் இயங்கிவந்த போலி கணக்கு என தெரியவந்ததும் போலீஸ் அவரை விடுவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு டிஜிபிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார் கலையரசன்.

கலையரசனின் கைதுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து காவல்துறை செய்தது தவறுதான் எனவும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்துப் பேசியுள்ளார் பொருளாதார ஆய்வறிஞரும், பேராசிரியருமான கலையரசன். இந்த சந்திப்பு அவரது கைது தொடர்பானதா அல்லது வேறு விவகாரம் தொடர்பானதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com