நெல்லை ரெயில் நிலையத்துக்குள் புகுந்து மேலாளரை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் கைது

ரெயில்வே அதிகாரி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. சங்கத்தினர் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
association staged a protest
Published on: 
Summary

ரெயில் நிலைய மேலாளர் சபாபதிக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3 ஆட்டோ டிரைவர்கள் அலுவலகத்தில் இருந்த பாட்டில் மற்றும் கம்பியால் சபாபதியை தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன.

ஆட்டோக்களுக்கு உரிமம்

இங்கு பயணிகளை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்வதற்காக 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பர்மிட் புதுப்பிப்பதற்கு போலீஸ் நிலையத்தில் தடையின்மை சான்று, ஆட்டோவிற்கான தகுதிச்சான்று, காப்பீடு உள்ளிட்ட 6 வகையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வணிக ஆய்வாளர் மூலம் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

தகராறு

இந்த நிலையில் புதிய சான்றுகள் பெறுவதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், இதனால் ஆட்டோ இயக்குவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் கூறி ஆட்டோ டிரைவர்களுக்கும், ரெயில் நிலைய அதிகாரிகளுக்கும் இடையே வாய் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரெயில்வே உதவி வணிக ஆய்வாளரை சந்திப்பதற்காக ரெயில் நிலைய மேலாளர் அலுவலகத்திற்கு வந்த சில ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்த கைப்பையை எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலாளர் மீது தாக்குதல்

அப்போது ரெயில் நிலைய மேலாளர் சபாபதிக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 3 ஆட்டோ டிரைவர்கள் அலுவலகத்தில் இருந்த பாட்டில் மற்றும் கம்பியால் சபாபதியை தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தடுக்க வந்த அருகில் இருந்த ரெயில் நிலைய கடை பெண் ஊழியரையும் ஆட்டோ டிரைவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

3 டிரைவர்கள் கைது

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் 3 ஆட்டோ டிரைவர்களையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் களக்காடு பகுதியை சேர்ந்த மருது பாண்டி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கணேசன், தெற்கு வாகைகுளம் பகுதியை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு பிடித்து சென்றனர். மேலும் காயம் அடைந்த மேலாளர் சபாபதியை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

7 பிரிவுகளில் வழக்கு

தொடர் விசாரணைக்கு பின்னர் ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் மீதும் கொலை மிரட்டல் விடுத்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அத்துமீறி அலுவலகத்துக்குள் புகுதல், ரெயில்வே சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

ரெயில்வே அதிகாரி

இதனிடையே ரெயில் நிலையத்திற்குள் புகுந்து ரெயில்வே அதிகாரி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. சங்கத்தினர் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com