ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தவிர்க்காதீர்- த.வெ.க. தலைவர் விஜய்

ஒரு வாக்குகூட விடாமல் பதிவு செய்து நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும்.
ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தவிர்க்காதீர்- த.வெ.க. தலைவர் விஜய்
Published on

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

வாக்காளப் பெருமக்களே,

வணக்கம்.

நமது வாக்கு- நமது உரிமை.

ஜனநாயகக் கடமை.

எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள். தயவு செய்து பொறுமையுடன் காத்திருந்து, வரிசையை விட்டு விலகாது நின்று, ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தவிர்க்காதீர்.

ஜனநாயகம் காப்பது நம் கடமை.

ஒரு வாக்குகூட விடாமல் பதிவு செய்து நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com