

த.வெ.க. அரசை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார்.
த.வெ.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். 18- வது வார்டு மாமன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார் .
தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் ஆ. செல்வி, மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மாலதி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் நிவேதா ஜெசிகா, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. செல்வம், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் வக்கீல் ஏழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு த.வெ.க. ஆட்சியில் அடங்காமல் ஏறி வரும் விலைவாசி உயர்வு, பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, நிர்வாக சீர்கேடு படு பாதாளத்துக்கு சென்று விட்டது உள்ளிட்ட நிலைமைகளை எடுத்துக் கூறி கண்டித்து பேசினார்கள்.