தி.மு.க. ஆட்சியில் டெண்டர் விடுவார்கள்.. தூர்வார மாட்டார்கள்..!- சேகர்பாபு குற்றச்சாட்டுக்கு அமைச்சர் என்.ஆனந்த் பதிலடி

தூர்வாரும் பணிகளை டிரோன் மூலமும் கண்காணித்து வருகிறோம். விரைவில் பணிகள் முடிவடையும்.
sekar babu- N Anand
Published on: 

முன்னாள் அமைச்சரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான சேகர்பாபு,"தி.மு.க. ஆட்சியில் அக்டோபர் மாதத்திலேயே தூர்வாரும் பணிகளை முடித்து விடுவோம், பல்வேறு பேரிடர்களை சந்தித்தபோதும் சென்னையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்கவில்லை.

ஆனால் த.வெ.க. அரசு இன்னும் தூர்வாரும் பணியை முழுவதுமாக முடிக்கவில்லை" என கூறியுள்ளார்.

அமைச்சர் ஆனந்த் பதிலடி

சேகர்பாபு கருத்துக்கு பதிலடி கொடுத்து அமைச்சர் என்.ஆனந்த் கூறியதாவது:-

கடந்த தி.மு.க. ஆட்சியில் தூர்வாரும் பணிகளுக்கு டெண்டர் மட்டுமே விடப்பட்டது. ஆனால் தூர்வாரும் பணிகள் நடைபெறாது.

த.வெ.க. ஆட்சியில் தமிழகமெங்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொண்டு தீவிரமான முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீர்நிலைகள் அனைத்தும் சிறப்பான முறையில் தூர்வாரப்படுகிறது. எந்தவித முறைகேடும் நடைபெறாத வண்ணம் டெண்டர்கள் அனைத்தும் வெளிப்படையாக விடப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் முறையாகவும் தரமாகவும் நடைபெற்று வருகிறது.

பருவ மழையினால் தமிழகமெங்கும் எந்த இடத்திலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஏரி குளங்களை தீவிரமாக தூர்வாரி வருகிறோம். இந்த பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதால் கால தாமதம் ஏற்படுகிறது.

தூர்வாரும் பணிகளை டிரோன் மூலமும் கண்காணித்து வருகிறோம். விரைவில் பணிகள் முடிவடையும்.

தி.மு.க. ஆட்சியை போல் நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் வெறும் டெண்டர் மட்டுமே விடுவது த.வெ.க. ஆட்சியில் நடைபெற வில்லை.

முதலமைச்சர் விஜய் உத்தரவின் படி தமிழகமெங்கும் வடகிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com