தி.மு.க. மாநில நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்- த.வெ.க.வில் இணைய திட்டம்?

கடந்த சில மாதங்களாகவே கட்சி பணியில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் திண்டுக்கல் மாவட்ட தி.மு.க.வில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்தார்.
தி.மு.க. மாநில நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்- த.வெ.க.வில் இணைய திட்டம்?
Published on: 
Summary

தி.மு.க.வில் எனக்கு வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் கனத்த இதயத்துடனும், மிகுந்த மன வருத்தத்துடனும் விலகி கொள்கிறேன்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த தி.மு.க. மாநில நிர்வாகி வி.ஜெயன் தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 35 ஆண்டுகளாக நான் இணைந்து பயணித்து வந்த தி.மு.க.வில் எனக்கு வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் கனத்த இதயத்துடனும், மிகுந்த மன வருத்தத்துடனும் விலகி கொள்கிறேன்.

கட்சி

இத்தனை ஆண்டுகளாக எனக்கு கட்சிப்பணியாற்றும் வாய்ப்பினை வழங்கிய கட்சியின் தலைவருக்கும், துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் என்னுடன் இணைந்து பணியாற்றிய நிர்வாகிகளுக்கும், நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியினையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

திமுக

கடந்த சில மாதங்களாகவே கட்சி பணியில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் திண்டுக்கல் மாவட்ட தி.மு.க.வில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். தற்போது விலகலை தெரிவித்துள்ள ஜெயன் த.வெ.க.வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com