

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் அக்.17ம் தேதி அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 17-10-2026 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
அதுபோது, கட்சி மக்களவை மாநிலங்களவை தவறாது கலந்து கொள்ளுமாறு உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.ஐ.ஆர்.முறைகேடு தொடர்பாக இந்தியா கூட்டணியினர், கரப்பான்பூச்சி கட்சி, ஆம் ஆத்மி, மாணவர் அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்து நிலையில், திமுக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் திமுக தீவிரமான எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என தவெக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.