கோவையில் "DMK Aura 10/10" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

கோவையில் திமுகதான் நிச்சயம் வெல்லும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் "DMK Aura 10/10" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
Published on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கோவை தெற்கு வேட்பாளர் செந்தில் பாலாஜி, கோவை வடக்கு வேட்பாளர் துரை செந்தமிழ்ச்செல்வன் உட்பட மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில் இந்த கோவை பிரச்சாரம் தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,

கோவையில் என் வாகனம் ஊர்ந்து செல்லவில்லை, மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்றது. அன்புக்கும், பண்புக்கும், மரியாதைக்கும், உழைப்புக்கும், புதுமைக்கும், புகழ்பெற்ற கோவையில் நமது கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு இன்றைய பரப்புரைக் கூட்டம் அடித்தளம் இட்டிருக்கிறது.

மேம்பாலங்கள், செம்மொழிப் பூங்கா, உக்கடம் பேருந்து நிலையம், கிரிக்கெட் & ஹாக்கி மைதானங்கள், பெரியார் அறிவுலகம், ELCOT IT பூங்கா என எனது சொந்த ஊராகவே நினைத்துக் கோவைக்குப் பெரும் திட்டங்களைச் செய்துகொடுத்த நம்பிக்கையோடும் உரிமையோடும் சொல்கிறேன்... கோவையில் வெல்லப்போவது நாம்தான்! ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com