தி.மு.க. கூட்டணியில் கமல் கட்சிக்கு மக்களவை தொகுதி கிடையாது: ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு

பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யும்.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் கமல் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தி.மு.க. கூட்டணியில் கமல் கட்சிக்கு மக்களவை தொகுதி கிடையாது: ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு
Published on

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வது எனவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com