

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக்குறைவு காரணமாக இன்று பிற்பகல் 2.24 மணிக்கு காலமானார் .
சுவாசக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் 70 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.
அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தனது இரங்கல் செய்தியில் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.