திருச்செந்தூரில் டாஸ்மாக் மதுபாட்டிலில் இறந்து கிடந்த பூச்சி, வண்டுகள்- மதுபிரியர் புகார்

திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் நண்பர்களுடன் சேர்ந்து 3 மதுபாட்டில்கள் வாங்கி உள்ளார்.
மதுபாட்டிலில் இறந்து கிடந்த பூச்சி, வண்டுகள்
மதுபாட்டிலில் இறந்து கிடந்த பூச்சி, வண்டுகள்
Published on
Summary

"பிளாக் பியர்ல் " எனும் வகை மதுபாட்டிலில் இறந்த நிலையில் விஷ பூச்சி, வண்டுகள் இருந்துள்ளது. இதை அறியாமல் வாங்கி மதுவை குடித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியை சேர்ந்தவர் பேச்சி முத்து. கூலித்தொழிலாளி. இவர் திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் நண்பர்களுடன் சேர்ந்து 3 மதுபாட்டில்கள் வாங்கி உள்ளார்.

அதில் "பிளாக் பியர்ல் " எனும் வகை மதுபாட்டிலில் இறந்த நிலையில் விஷ பூச்சி, வண்டுகள் இருந்துள்ளது. இதை அறியாமல் வாங்கி மதுவை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் பேச்சிமுத்து தனக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக கூறி உள்ளார்.

இதனையடுத்து வாங்கிய மதுபாட்டிலை பார்த்த போது அதில் இறந்த நிலையில் பூச்சி, வண்டுகள் இருந்ததால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் வாங்கிய மது பாட்டிலில் இதுபோன்று பூச்சி, வண்டுகள் இருந்துள்ளதாகவும் புகார் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com