விஜயராகவ பெருமாள் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

குளத்தின் தண்ணீரிலும், குளத்தை சுற்றிலும் ஏராளமான குப்பைகள் உள்ளன.
விஜயராகவ பெருமாள் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
Published on: 
Summary

கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

காஞ்சீபுரம் அருகே உள்ள திருபுட்குழி பகுதியில் பிரசித்தி பெற்ற விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. மேலும் குளத்தின் தண்ணீரிலும், குளத்தை சுற்றிலும் ஏராளமான குப்பைகள் உள்ளன.

மீன்கள்

இறந்து மிதக்கும் மீன்களால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவில் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அமாவாசை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இங்குள்ள குளக்கரையில் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். கடந்த சனிக்கிழமை அமாவாசை தினத்தில் ஏராளமான பக்தர்கள் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதில் தேங்கிய குப்பைகள் குளத்தின் தண்ணீரில் சேர்ந்ததில் மீன்கள் இறந்து இருக்கலாம். குளத்தை சுற்றி குப்பைகளும் சேர்ந்து கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

தர்ப்பணம்

தர்ப்பணம் செய்ய வருபவர்களுக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே தூய்மை பணியை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். குளத்தில் செத்து மிதக்கும் மீன்களையும், குப்பைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். இதேபோல் சர்வ தீர்த்த குளம், வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் உள்ள அஸ்தகரி கோவில் குளங்களை உள்ள குப்பைகளில் உடனடியாக அகற்ற வேண்டும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com