

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் 'முரசு' புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஆந்திரா அருகே வங்களா விரிகுடாவை அடையும். சென்னை மற்றும் வட மாவட்டங்களில் நாளை இரவு முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வங்கக் கடலில் அர்னாப் புயல் உருவாகி ஆந்திரா நோக்கி சென்றதால் தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், வங்கக்கடலில் அடுத்த 6 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மாறும்போது, இந்தியா பரிந்துரைத்த ‘முரசு’ என்று பெயரிடப்படும். இது வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் மாலையில் ஆந்திரா அருகே வங்களா விரிகுடாவை அடையும்.
2026-ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் உருவாகும் 2-வது புயல்இதுவாக இருக்கும்.
இதனிடையே, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை இரவு முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.