என்னை முதலில் பேச அனுமதிக்க வேண்டும்: ஆவேசம் அடைந்த சி.வி.சண்முகம்

அ.தி.மு.க. சார்பாக தளவாய் சுந்தரத்தைப் பேச சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அழைப்பு விடுத்தார்.
cv shanmugam
Published on
Summary

தமிழக சட்டசபையில் தன்னை முதலில் பேச அனுமதிக்க வேண்டும் எனக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.வி.சண்முகம் ஆவேசம் அடைந்தார்.

தனித்தீர்மானம்

தமிழக சட்டசபையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார்.

இதைதொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில்

தீர்மானத்தை வரவேற்பதாக தி.மு.க.வும், தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக அ.தி.மு.க., சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, தேமுதிக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் தெரிவித்தனர்.

அதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.

அரசின் தனித்தீர்மானம் மீதான விவாதத்தில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் பேசினர். தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசினார்.

அதன்பின், அ.தி.மு.க. சார்பாக தளவாய் சுந்தரத்தைப் பேச சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அழைப்பு விடுத்தார்.

சி.வி.சண்முகம் ஆவேசம்

அப்போது ஆவேசமாக எழுந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.வி.சண்முகம் தன்னைப் பேச அனுமதிக்க வேண்டும் எனக்கோரி கோபம் அடைந்தார்.

தனக்கு பேச அனுமதி தரவேண்டும் என ஆவேசமாக கேட்ட சி.வி.சண்முகம் அவையில் இருந்து கிளம்பி வெளியே போவதுபோல சென்றார்.

உடனே சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சிவி சண்முகத்திடம் உங்களுக்கு அடுத்து பேச வாய்ப்பு தருகிறேன் எனக்கூறி சமாதானம் செய்தார்.

அப்போது முன் இருக்கையில் இருந்த எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகனும் எழுந்து சென்று சி.வி.சண்முகத்தை இருக்கையில் அமர வைத்தார். அதன்பிறகே சி.வி.சண்முகம் சமாதானம் ஆனார். தளவாய் சுந்தரத்தை தொடர்ந்து, சி.வி.சண்முகத்திற்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் சட்டசபையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com