திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
Published on: 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு சிறந்த ஆன்மீக சுற்றுலா தலமாகவும், பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.

இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

பக்தர்கள்

ஞாயிறு விடுமுறை நாளான இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர் அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் நடை வழக்கம் காலை 4மணிக்கு திறக்கப்பட்டது 4.30விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

கந்த சஷ்டி திருவிழா

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்ளும் கந்த சஷ்டி திருவிழா வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளான கடற்கரையை சுத்தம் செய்தல், சவுக்கு கம்புகளால் அரண் அமைக்கும் பணி, பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்ளும் தற்காலிக கொட்டகை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

X