தமிழக பட்ஜெட்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

வெளிநாட்டில் இருந்து நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக பேசினார்.அரசின் முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழக பட்ஜெட்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை
Published on

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 12ம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது. இதைதொடர்ந்து, வரும் 19ம் தேதியன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இதை முன்னிட்டு, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வந்தார்.

வெளிநாட்டில் இருந்து நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக பேசினார்.

முதலமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தன், அரசின் முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com