

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவை திரும்ப பெற வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்த இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று சென்னை வருகை தந்தனர்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே, மம்தா பானர்ஜி, டிகே சிவகுமார், வி.டி. சதீசன், ரேவந்த் ரெட்டி என பலரும் ஸ்டாலினை அவரது வீட்டில் வைத்து சந்தித்து பேசினர்.
இதில் அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த ஸ்டாலின் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டையும் எடுத்துரைத்தார்.
சந்திப்பின் பின் தலைவர்கள் வேனில் விமான நிலையம் திரும்பினர்.
சென்னை விமான நிலையத்தில் வைத்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அங்கு ராகுல் கூறியதாவது, "நாங்கள் ஸ்டாலின் ஜி உடன் நல்லதொரு உரையாடலை நடத்தினோம். எங்கள் பார்வைகளை அவருக்கு விலகினோம். நாடாளுமன்றத்தை முழுமையாக மாற்றியமைத்து தொகுதி மறுவரையறை மூலம் 850 இடங்களாக உயர்த்தி இந்தியாவின் அதிகரிக்க பாஜகவை அனுமதிக்க கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு.
தமிழ்நாட்டைக் காக்க வேண்டியதன் அவசியத்தையும், பாஜகவின் இந்த மோசமான திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதையும் தமிழக உரிமைகளின் பாதுகாவலராக திகழும் சகோதரர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம்.
பாஜக 850 இடங்களை கொண்ட மக்களவையை உருவாக்கிவிட்டால், இந்தியாவில் ஜனநாயகம் முற்றிலுமாக அழிந்துவிடும்." என்றார்.
இதனிடையே மறுபுறம் திமுக தங்கள் நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம் என கூறியது குறித்து ராகுலிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ராகுல், "திமுக என்ன சொன்னது அல்லது என்ன செய்தது என்பது எங்களுக்குத் தெரியாது.
சகோதரர் ஸ்டாலினிடம் நாங்கள் என்ன விவாதித்தோம் என்பதை மட்டுமே நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இது தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் மக்கள், இந்திய ஒன்றியம் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே ஒரு பெரும் அச்சுறுத்தல் என்பதை அவரிடம் எடுத்துரைத்தோம்.
தேசப்பற்றுள்ள அனைவரையும் போலவே, சகோதரர் ஸ்டாலினும் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும்." என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.