

கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மீது, பெண் அரசு அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, மிரட்டுவது, பெண்ணின் மாண்புக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் தியாகதுருகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது அண்மையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு வந்துள்ளது.
வசந்தம் கார்த்திகேயன் மீது பெண் அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என இன்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.