கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்மாலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்.
கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்மாலை
Published on

நீங்கள் நினைத்தீர்கள்.. நாங்கள் செய்து காட்டி வருகிறோம் என்று கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்மாலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

புகழால் அல்ல; செயலால் மறக்க முடியாத தலைவர் கலைஞர், அதிகாரத்தால் அல்ல; அன்பால் போற்றப்படும் தலைவர் கலைஞர்; இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்; நீங்கள் இருந்து வேண்டியதை உங்கள் மகனாக நான் செய்து வருகிறேன்; கலைஞர் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை உன்னதத் தமிழ்நாடாக உயர்த்திக் காட்டி வருகிறோம்; இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com