கோவை மாணவன் கொலை விவகாரம்: ஆதவ் அர்ஜூனா Vs உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்

கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானத்தில் அரசு விளக்கம் தான் கூற வேண்டும், பதில் குற்றச்சாட்டு கூறுவது அவை மரபு அல்ல என தி.மு.க. எம்.எல்.ஏ.வேலு கூறினார்.
ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்
ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்
Published on

தி.மு.க. உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டரை வயது சிறுமி பலியானதற்கு தி.மு.க. ஆட்சியில் எடுத்த நடவடிக்கை என்ன? என்று அமைச்சர் ஆதவ் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று கோவை மாணவன் கொலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில்,

* கடந்த 2020-ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் இல்லை.

* போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால் தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பு.

* கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் போக்சோ வழக்குகள் 40 சதவீதம் அதிகமாகியுள்ளது. இது காவல்துறை கொடுத்த அறிக்கை.

* தி.மு.க. ஆட்சியில் காவல்துறை அளித்த அறிக்கை வைத்து தான் பேசுகிறேன், த.வெ.க.வின் அறிக்கை வைத்து கூறவில்லை.

* தி.மு.க. உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டரை வயது சிறுமி பலியானதற்கு தி.மு.க. ஆட்சியில் எடுத்த நடவடிக்கை என்ன?

* தி.மு.க. ஆட்சியில் தான் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்தது.

* தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாக தான் தி.மு.க.வை மக்கள் தூக்கி எறிந்தனர் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சை ஏற்க முடியாது. அமைச்சர் ஆதவ் எதிர்க்கட்சிகள் குறித்து பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கேள்வி நேரத்திலும், கவன ஈர்ப்பு தீர்மான நேரத்திலும் குற்றச்சட்டு கூறக்கூடாது என்பது தான் பேரவை விதி. கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானத்தில் அரசு விளக்கம் தான் கூற வேண்டும், பதில் குற்றச்சாட்டு கூறுவது அவை மரபு அல்ல என தி.மு.க. எம்.எல்.ஏ.வேலு கூறினார்.

இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஒரு வாரத்தில் போதைப்பொருட்களால் எவ்வளவு கொலைகள் நடந்துள்ளன என்பதை கூறினோம். நாங்கள் கேட்டதற்கு பதில் சொல்லாமல், உங்கள் ஆட்சியில் இது நடந்தது, அது நடந்தது எனக் கூறுகின்றனர். தி.மு.க. ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. த.வெ.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?.

போதைப்பொருளுக்கு எதிராக தி.மு.க. எடுத்த நடவடிக்கை, விழிப்புணர்வு செய்த டேட்டா அவரிடம் இருக்கிறது. தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அமல்ராஜை எதற்காக ஆணையர் பதவியில் அமர்த்தியுள்ளீர்கள்? போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களக்கு முதல்வர் விருது வழங்கினார். கடந்த ஓராண்டாக சிறப்பாக செயல்பட்ட 15 பேருக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார். போதைப்பொருள் ஒழிப்புக்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஏன் விருது வழங்கினீர்கள்? என்றார்.

இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், மற்றவர்களை குற்றஞ்சாட்டுவது எங்கள் நோக்கம் அல்ல. மக்கள், பெண்கள் அனைவரும் போதைப்பொருளை கட்டுப்படுத்த வலியுறுத்தினர் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com