பெரியார் அறிவுலகம் ஊழல் குற்றச்சாட்டு: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் புத்தக கொள்முதலில் ஊழல் நடந்ததாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
Coimbatore Periyar Library
Published on: 
Summary

கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதலில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் புத்தக கொள்முதலில் ஊழல் நடந்ததாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

சமீபத்தில் பெரியார் அறிவுலகம் நூலகத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.

இதையடுத்து இந்த நூலகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து எழுத்தாளர் பெருமாள் முருகன், புத்தகத்தில் தவறுதலாக கருத்துகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் போன்ற பதிப்பகங்களின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதையடுத்து நூல்கள் கொள்முதலில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

தமிழக அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தபோது, இதுகுறித்து ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இது ஒரு விதமான ஏ.ஐ ஊழல் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், புத்தக கொள்முதல் ஊழல் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டன.

இந்த ஆய்வின் போது, சேகரிகப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது.

X