வாஷிங்டன் சுந்தருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

வாஷிங்டன் சுந்தர் அவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!
வாஷிங்டன் சுந்தர்- முதலமைச்சர் விஜய்
வாஷிங்டன் சுந்தர்- முதலமைச்சர் விஜய்வாஷிங்டன் சுந்தர்- முதலமைச்சர் விஜய்
Published on: 
Summary

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியைப் பாராட்டிய முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரது சாதனையை முன்னிட்டு ரூ.75 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பாராட்டுகள்

ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சம் வழங்கப்படும். அவரது வெற்றி இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.

வாஷிங்டன் சுந்தர் அவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்! என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com