பாடகர் கிருஷ்ணராஜ் மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு- முதலமைச்சர் விஜய்

கிருஷ்ணராஜை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on: 
Summary

தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்ததாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பேரிழப்பு

தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.

தன்னுடைய தனித்துவமான குரலாலும், உற்சாகம் ததும்பும் பாடல்களாலும் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com