கல்வித்துறையில் ஊழல் நடப்பதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?- முதலமைச்சர் விஜய் பேச்சு

பள்ளிகளின் பாதுகாப்பு விஷயத்தில் விளையாடி உள்ளனர், கும்பகோணம் பள்ளி தீவிபத்தை நினைத்தால் மனது பதறுகிறது.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on: 
Summary

கல்வித்துறையில் ஊழல் நடப்பதை ஏற்க முடியாது என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். மாணவர்களின் சாதனைகளை பாராட்டும் வகையில், பொதுத்தேர்வில் சிறந்த மாணவர்களுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ - மாணவிகளுக்கு கடந்த 2023-ம் ஆண்டு முதல் கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகளை த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான விஜய் வழங்கி வருகிறார்.

கல்வி விருது - ஊக்கத்தொகை

முதலமைச்சர் ஆன பிறகு விஜய், முதல்முறையாக இந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்கி வருகிறார். முதல் கட்ட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் கடந்த 4-ந்தேதி நடந்தது. இதில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் விஜய், கல்வி விருது மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்கினார். இந்த விழாவில் மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இன்றும், நாளையும்

இந்த நிலையில் 2-ம் கட்டமாக த.வெ.க. சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னையில் இன்றும், நாளையும் நடக்கிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இந்த விழா நடைபெறுகிறது. இந்த 2 நாட்களிலும் பிற்பகலில் விழா தொடங்கி நடைபெறுகிறது.

இன்று கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பெரம்ப லூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த சட்டமன்ற தொகுதி களில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

கல்வி விருது வழங்குவதற்கு முன்னதாக விழாவில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-

* என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான நண்பா நண்பீஸ்க்கும், பெற்றோருக்கும் எனது வணக்கம்.

* சிலர் நான் பேசுவதை அரசியலாக்க முயற்சிப்பார், அதை பற்றி எனக்கு கவலையில்லை.

* ஊழலை கட்டுப்படுத்துவதற்காக நான் எடுத்த சில முயற்சிகளால் சிலரின் அடித்தளம் ஆடிப்போய் உள்ளது.

* அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள கல்வித்துறையில் ஊழல் செய்வதா?

* மற்ற துறைகளில் ஊழல் என்றால் கூட பரவாயில்லை. ஆனால் கல்வித்துறையில் ஊழல் நடப்பதை எப்படி ஏற்பது? எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?

* பள்ளிகளின் பாதுகாப்பில் கூட ஊழல் செய்வதா?

* பள்ளிகளின் பாதுகாப்பு விஷயத்தில் விளையாடி உள்ளனர், கும்பகோணம் பள்ளி தீவிபத்தை நினைத்தால் மனது பதறுகிறது.

* ஊழல் என்பது பழைய விஷயம் தான் அதை முற்றிலும் ஒழிக்காவிட்டாலும் கட்டுப்படுத்த முடியும்.

* எனக்கு முன் வைத்துள்ள 3 கோப்புகளை பற்றி கூறினேன், திறந்துதான பாருங்களேன் என கூறுகின்றனர்.

* அறிவுலகமா? ஊழல் உலகமா? என தெரியவில்லை.

* வாழ்க்கையில் எங்கும் எப்போதெல்லாம் மாணவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ - மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்கி வருகிறார்.

X