ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு இன்று விருந்து அளிக்கிறார் முதலமைச்சர் விஜய்

செஸ் ஒலிம்பியாட் வெற்றியாளர்களுக்கு ஊக்கத்தொகையுடன் விருந்து அளிக்கப்படுகிறது.
Vijay
Published on: 
Summary

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று விருந்து அளிக்கிறார்.

ஜப்பானில் நடந்த 20-வது ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்தியா 495 பேர் கொண்ட படையை அனுப்பியது. அவர்கள் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்று 4-வது இடத்தை பிடித்திருக்கிறார்கள். அதிகபட்சமாக தடகளத்தில் ஒரு தங்கம் உள்பட 24 பதக்கமும், துப்பாக்கி சுடுதலில் 3 தங்கம் உள்பட 15 பதக்கமும், வில்வித்தையில் 5 தங்கம் உள்பட 9 பதக்கமும் கிடைத்தது.

தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் உள்பட 5 பேர் தலா 3 பதக்கங்களும், தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார், ஜோஷ்னா சின்னப்பா (ஸ்குவாஷ்), விஷால் டி.கே. (தடகளம்), கணேஷ் மணிரத்னம் (வில் வித்தை) உள்பட 23 பேர் தலா 2 பதக்கங்களுடன் வென்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு அரசு சார்பில் பரிசுத் தொகைகளை முதலமைச்சர் விஜய் உடனுக்குடன் அறிவித்தார்.

இந்நிலையில் ஆசிய போட்டியில் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று விருந்து அளிக்கிறார்.

இந்த நிகழ்வில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், கமலினி, தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ், பரணிகா இளங்கோவன், அபிநயா ராஜராஜன், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் உள்ளிட்ட 35 தமிழக வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

அத்துடன், சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி வாகை சூடிய பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்கின்றனர். இவர்களுக்காக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையை முதலமைச்சர் விஜய் வழங்கி கவுரவிக்கிறார்.

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று மாலை 5 மணிக்கு ஊக்கத்தொகையுடன் விருந்தளிக்கப்பட உள்ளது. செஸ் ஒலிம்பியாட் வெற்றியாளர்களுக்கும் ஊக்கத்தொகையுடன் விருந்து அளிக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com