ஆசிய விளையாட்டு: தங்கம் வென்ற கோல்ப் வீராங்கனைக்கு கபில்தேவ் பாராட்டு

கோல்ப் விளையாட்டில் இந்தியாவின் பிரணவி உர்ஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
kapil dev, pranavi urs
Published on: 
Summary

ஆசிய விளையாட்டின் கோல்ப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு கபில்தேவ் பாராட்டு தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்திய அணி 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியா 85 பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களைப் பெற்று 4-வது இடத்தைப் பெற்றது.

கடந்த முறையும் இந்திய அணி 4-வது இடத்தைப் பிடித்திருந்தது. அப்போது 106 பதக்கங்களைப் பெற்றிருந்தது. தற்போது 21 பதக்கங்கள் குறைந்துள்ளது.

கோல்ப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை பிரணவி தங்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய கோல்ப் வீராங்கனை என்ற வரலாற்றை படைத்தார். அவர் பெண்கள் அணிகள் பிரிவிலும் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

கபில்தேவ் பாராட்டு

இந்நிலையில், கோல்ப் போட்டியில் சாதித்த பிரணவியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கோல்ப் அமைப்பின் தலைவருமான கபில்தேவ் பாராட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரணவி தங்கம் வென்றது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். இதேபோல அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றதும் சிறப்பானது.

இந்தப் பதக்கங்களை வென்ற நமது வீராங்கனைகளின் திறமை, உறுதிப்பாடு, கடின உழைப்பை பாராட்டுகிறேன். பிரணவி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com